உள்நாட்டு செய்திகள்

மட்டக்குளிய-விஸ்ட்வைக் வீதிக்கு பூட்டு…



மட்டக்குளிய-விஸ்ட்வைக் வீதியின் ஒருபகுதி இன்று(௦5) இரவு 9 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை முற்றாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் புதிதாக நீர்க்கு​ழாய்கள் பொருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுவதால் குறித்த வீதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, காக்கைத் தீவுக்கு திரும்பும் சந்தியிலிருந்து சென் மேரிஸ் வீதிக்கு திரும்பும் சந்தி வரையான பகுதியே இவ்வாறு மூடப்படவுள்ள நிலையில், அங்கு வசிப்பவர்களின் பாவனைக்காக வீதி திறக்கப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

#####

Related posts

அவசரகால சட்டத்திற்கு முற்றுப்புள்ளி

wpengine

வடக்கு மாகாண புதிய ஆளுநரின் நியமனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது

wpengine

கொவிட் – 19 : ராஜாங்கனையில் சில பகுதிகள் முடக்கம்

wpengine