உள்நாட்டு செய்திகள்

மட்டக்குளிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – மேலும் ஒருவர் கைது..



மட்டக்குளிய – ஜூபிளி மாவத்தை பகுதியில் கயான் ஜீவந்த எனும் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றத்திற்காக பயன்படுத்தியதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவரே, களனி அதிவேக வீதிக்கு அருகில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் வசம் இருந்து இதற்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் 8 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஒருவராகும்.

இன்று(29) அவரை புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 5ம் திகதி மட்டக்குளிய – ஜூபிளி மாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் முச்சக்கர வண்டியில் பயணித்த கயான் ஜீவந்த சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா 05 விக்கட்டுக்களினால் வெற்றி

wpengine

புகையிரத வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது..

wpengine

பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட சுற்றறிக்கை – கல்வி அமைச்சர்…

wpengine