உள்நாட்டு செய்திகள்

மட்டக்குளிக்கான பிரதான வீதி மூடப்படுகிறது…



குடிநீர் குழாய் திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு – 15, மட்டக்குளிக்கான பிரதான வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பாவத்தை வரையான வீதி இன்று(17) இரவு 9 மணி தொடக்கம் எதிர்வரும் 20 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை குறித்த வீதி மூடப்படவுள்ளது.

இந்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, மட்டக்குளி – பாம் வீதி பகுதியும் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

இதன் காரணமாக மட்டக்குளி விஸ்வைக் சந்தியில் இருந்து பர்கியூஷன் வீதியூடாக மட்டக்குளி பிரதான வீதிக்கு சென்று அங்கிருந்து கதிரானவத்தை வீதியூடாக பாம் வீதிக்கு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts

சுரங்கத்தில் தவறி வீழ்ந்ததில் மூவர் பலி

wpengine

போதகருக்கு ஒரு சட்டம் தேரருக்கு ஒரு சட்டமா? – சாணக்கியன்

wpengine

தொலைக்காட்சி, வானொலி அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு

wpengine