Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய கடல் கொந்தளிப்பு – மீன்பிடி நடவடிக்கைகள் பாதிப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  – ரீ.எல்.ஜவ்பர்கான் –

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் பாரியளவில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய காத்தான்குடி, ஏத்துக்கால், பூநொச்சிமுனை, நாவலடி உட்பட பல கரையோர பிரதேசங்களில் இவ்வாறு கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. இதனால் கடற்றொழில் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன். மீனவர்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

மீனவர்கள் தமது மீன்பிடி படகுகள் மற்றும் தோணி களை கரையிலிருந்து தூர இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட சந்திப்பு

wpengine

ஜ. நா பொதுச்சபை கூட்டத்தில் ஜனாதிபதி உரை…

wpengine

இந்த வருடத்தில் 05 ரயில் பயணிகள் பெட்டிகள் சேவையில்

wpengine