உள்நாட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ‘கைத்தொழில் பேட்டை’ அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வறுமை ஒழிப்பு செயற்திட்டத்துக்கு சமாந்தரமாக வாகனேரி பிரதேசத்தில் கைத்தொழில் பேட்டை ஒன்று அமைக்கப்படவுள்ளது.

இதன்படி, பாதணிகள் மற்றும் தோற்பொருள் தொழிற்றுறைக்கு தேவையான மூல வளங்களை பெற்றுக் கொள்ளல், இத்துறையில் சிறு கைத்தொழில் துறைக்கு வசதிகளை செய்து கொடுத்தல் மற்றும் மனித வளங்களை பயிற்றுவித்தல், பொது வசதிகள் மற்றும் விநியோக வசதிகள் போன்றவற்றுக்காக சூழலுக்கு இயல்பான கைத்தொழில் பேட்டை ஒன்று அமைக்கப்படவுள்ளது.

இது குறித்து கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாட் பதியூதீனினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் பிரச்சாரங்களுக்கு அரச வாகனங்களை பயன்படுத்த தடை…

wpengine

SLPP யின் வேட்பாளர் தொடர்பில் மஹிந்த கருத்து

wpengine

மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் நவம்பரில் பூர்த்தி

wpengine