உள்நாட்டு செய்திகள்

மக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட 4 மில்லியன் பெறுமதியான தங்கம் மீட்பு..



சவுதி அரேபியாவின் மக்காவில் இருந்து இலங்கைக்கு ஒரு தொகை தங்கம் கடத்தி வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று(04) கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதியில் இருந்து 814.16g நிறையுடைய தங்கம் இதன்போது கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி 4,472,380 ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தங்க வளையல்கள், மோதிரங்கள் மற்றும் பெண்டன்கள் உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் அவரிடமிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபருக்கு 100,000 ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார்.

 

#####

Related posts

சாறுவா சுனிலுக்கு 15 வருட கால கடூழிய சிறை

wpengine

பிரபல தொலைக்காட்சி நட்சத்திரங்களுக்கு ஸ்ரீ.சு.கட்சியில் வேட்பாளர் பதவி இல்லை

wpengine

சுற்றாடல் துறை மேம்பாடுகளின் உச்சபட்ச இலக்குகளை அடைய பேச்சுவார்த்தை.

News Editor