உள்நாட்டு செய்திகள்

மக்கள் குரல்களுக்கு செவிசாய்க்காத நல்லாட்சி அரசாங்கம் – பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்



தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும், முன்னைய மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை போன்றே செயற்படுகிறது என்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

மக்கள் குரல்களுக்கு செவிசாய்க்காத வகையில் இரண்டு அரசாங்கங்களும் ஒன்றாகவே உள்ளன என்று ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர அறிக்கை ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

குடிநீருக்காக போராடிய மக்கள் மீது மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ரத்துபஸ்வௌவில் துப்பாக்கி சூட்டை நடத்தியது

இதனையே இந்த நல்லாட்சி அரசாங்கமும், அண்மையில் ஹம்பாந்தோட்டை, பண்டாரகிரிய என்ற இடத்தில் குடிநீருக்காக போராடிய மக்களுக்கு செய்திருக்கிறது.

இன்னும், பண்டாரகிரியவிலும் பொலிஸார் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் நடைமுறை அரசாங்கத்தின் நிர்வாகத்தை நல்லாட்சி என்று கூறமுடியாது என்றும் வீரசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நிஸ்ஸங்க

wpengine

சிறைக் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம்

News Editor

ரூ. 1,000 மில்லியன் நட்டஈடு கோரி பாதுகாப்பு செயலாளர் கடிதம்…

wpengine