உள்நாட்டு செய்திகள்

மகிந்தவிற்கு பிரதமர் பதவி – மொட்டுவிற்குள் வெடித்தது பிளவு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவைவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிப்பது தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சிக்கு சென்று எதிர்க்கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என பெரமுனவைச் சேர்ந்த குழுவொன்று கருத்து தெரிவித்துள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் பதவியை மகிந்த ஏற்பதுதான்

பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ஏற்பதுதான் பொருத்தமானது என்றும் அதன் மூலம் அவருக்கு அரசியலில் இருந்து கௌரவமான பிரியாவிடை வழங்க முடியும் என்றும் மற்றைய குழுவினர் வலியுறுத்துகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ராஜபக்ச குடும்பத்தில் தீவிர விவாதங்கள் நடந்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

Related posts

30/1 பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து இலங்கை விலகியது

wpengine

மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையிலான புகையிரத சேவைகள்…

wpengine

சமீர சேனாரத்ன மீது துப்பாக்கிப் பிரயோகம் – சந்தேகத்தின் பேரில் மாநகர சபை உறுப்பினர் கைது…

wpengine