Top Story 2உள்நாட்டு செய்திகள்

மகன் தாக்கியதில் தாய் மரணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனது வீட்டு வளாகத்தில் நேற்று (06) பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணிநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 72 வயது நாவலடி பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மகனுடன் ஏற்பட்ட தகராறு அதிகரித்ததைத் தொடர்ந்து மகன் தாக்கியதில் குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உடைந்த துடைப்பம் மற்றும் தடி ஆகியவை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தக் கொலையுடன் தொடர்புடைய 42 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

விசேட வைத்தியர்களது ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு…

wpengine

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து இடைநிறுத்தம்

wpengine

இந்திய – இலங்கை பாலம் அமைக்கப்படாது அரசு கடும் எதிர்ப்பு

wpengine