உள்நாட்டு செய்திகள்

பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகம் 05ம் திகதி தேசிய மரபுரிமையாக அறிவிக்கப்படவுள்ளது..



பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகம் எதிர்வரும் 05ம் திகதி தேசிய மரபுரிமையாக அறிவிக்கப்படவுள்ளதால், அன்றைய தினம் திகதி நாட்டிலுள்ள சகல பௌத்த நிலையங்களிலும் அரச நிறுவனங்களிலும் பௌத்த கொடியை ஏற்றி கௌரவத்தை செலுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று(02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், 2300 வருடங்களாக பௌத்த பிக்குகள் உள்ளடங்களாக இலங்கையின் பௌத்த மக்களால் போற்றி பாதுகாக்கப்படும் பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகத்தை இலங்கையின் தேசிய மரபுரிமையாக அறிவிக்கும் தேசிய வைபவம் ஜனவரி மாதம் 05ஆம் திகதி மாத்தளை அலுவிஹாரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்தார்.

Related posts

மக்களின் பிரச்சினைகள், நெருக்கடிகள் தீர்ந்ததும் தேர்தல் நடத்தப்படும் : தேர்தல்கள் ஆணைக்குழு

wpengine

லக்கல ஆயுத விவகாரம் – லக்கல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பணி நீக்கம்

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக நகர மண்டபம் உள்ளிட்ட பகுதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine