Top Story 2உள்நாட்டு செய்திகள்

போலி தகவல்களை வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போலியான தகவல்களை வழங்கும் அல்லது வழங்கப்பட வேண்டிய தகவல்களை மறைக்கும் கொரோனா நோயாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனைகளின் போதிலும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் போதிலும் பலர் போலியான தகவல்களை வழங்கியுள்ளமை பதிவாகியுள்ளன.

இவ்வாறு போலியாக வழங்கப்படும் தகவல் குற்றமாக பதிவு செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்காரணமாக தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய, அவ்வாறான குற்றவாளியாக அடையாளம் காணப்படுவோருக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

நாடாளுமன்ற கூட்டத் தொடர் செவ்வாயன்று

wpengine

13 நிமிடங்களில் கூடிக் கலைந்த பாராளுமன்றம்

News Editor

நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் – ஜனாதிபதி…

wpengine