உள்நாட்டு செய்திகள்

போர்ட் சிட்டி திட்டத்திற்கு இன்னும் 2 ஹெக்டயர்கள் சீனாவுக்கு வழங்க இணக்கம்.



கொழும்பு துறைமுக நகர திட்ட பணிகளின் தாமதத்தினால் ஏற்பட்ட நட்டத்தை பெற்றுக் கொள்ளாதிருக்க அந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கும் சீன நிறுவனம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரது சீன விஜயத்தின் போது ஏற்பட்ட நல்லுறவின் பிரதிபலனாக கொழும்பு துறைமுக நகர திட்ட பணிகளின் தாமதத்தினால் ஏற்பட்ட நட்டத்தை பெற்றுக் கொள்ளாதிருக்க அந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கும் சீன நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்குப் பதிலீடாக குறித்த வேலைத் திட்டத்திற்கு, இரவு நேர கார் பந்தய போட்டிகள் (நைட் ரேஸ்) நடத்துவதற்கு ஒதுக்கப்பட்டிருந்த காணியில் இருந்து இரண்டு ஹெக்டயர்களை அந்த சீன நிறுவனத்திற்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்

அதன்படி குறித்த துறைமுக நகர திட்ட பணிகளை இடைநிறுத்தல், மீண்டும் ஆரம்பித்தல், பொருட்கள் சேதமடைந்தல் அகியவற்றினால் சீன நிறுவனத்திற்கு ஏற்பட்டிருந்த நட்டத் தொகையை இலங்கை அரசாங்கம் வழங்கத் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாண் விலையும் ரூ.10 இனால் அதிகரிப்பு

wpengine

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3வது மின் உற்பத்தி இயந்திரத்தை மீள செயற்படுத்த எதிர்பார்ப்பு..

wpengine

ஜனாதிபதித் தேர்தல் – பொலிஸாருக்கு 668 மில்லியன் ரூபா தேவை

wpengine