உள்நாட்டு செய்திகள்

போயா தினத்தில் உணவுப் பொதிகளில் “இறைச்சி பச்சை நிறம்” – நுகர்வோர் குழப்பம்..



புத்தாண்டு தினமான நேற்று(01) தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள சிற்றூண்டிச்சாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவுப் பொதிகளில் இருந்த கோழி இறைச்சியின் நிறம் பச்சையாக காணப்பட்டுள்ளதால், மக்கள் பெரும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர்.

நேற்று(01) போயா மற்றும் புதுவருடம் என்பதால், தம்புள்ளை பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலக அதிகாரிகள் விடுப்பில் இருந்தமையால், மக்களுக்கு முறைப்பாடு செய்வதில் சிரமங்கள் காணப்பட்டுள்ளது.

குறித்த உணவுப் பொதியுடன் சம்பந்தப்பட்ட சிற்றூண்டிச்சாலைக்கு சென்று வினவிய போது, பதிலளித்த அவர்கள், குறித்த சிற்றூண்டிச்சாலையில் இடம்பெற்ற தவறொன்றினாலேயே இது இடம்பெற்றுள்ளதாக ஒப்புக்கொண்டனர்.

பச்சை நிற மரக்கறிகளுக்கு ஒரு சுவையூட்டியும், இறைச்சி போன்றவற்றுக்கு பிறிதொரு சுவையூட்டியும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில், மரக்கறிகளுக்கு பயப்படுத்தப்படும் சுவையூட்டு தவறுதாலக குறித்த இறைச்சியில் போடப்பட்டமையே இந்த நிறமாற்றத்துக்கு காரணம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுபோன்ற செயற்கை சுவையூட்டிகள் வர்த்தக நிலையங்களில் கிடைப்பதாகவும், அனைத்து ஹோட்டல்கள் மற்றும் சிற்றூண்டிசாலைகளிலும் இவை பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்ட அக்கடையின் உரிமையாளர், இது மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்துவது அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

#reeshmaa..

Related posts

ஒட்சிசன் கொள்வனவு இடைநிறுத்தம்

wpengine

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு கோப்குழு அழைப்பாணை

wpengine

இராட்டினம் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்…

wpengine