கேளிக்கை

போதையில் வாகனம் செலுத்தி விபத்து..



போதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக நடிகர் ஜெய் கைதாகி, பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அவரது கார் ஓட்டுனர் உரிமத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக உள்ள ஜெய் நேற்று இரவு தனது நண்பர்களுடன் இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர், தனது சொகுசு காரில் வீட்டுக்குச் செல்லும் போது தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதேவேளை நடிகர் ஜெய்யும், அவரது நண்பரும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. போதை தெளிந்த பிறகு அவர்களிடம் போக்குவரத்து பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

நடிகர் ஜெய் மீது குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை உண்டாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், அவரது ஓட்டுனர் உரிமத்தை இரத்து செய்ய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெய் ஏற்கனவே மயிலாப்பூரில் குடிபோதையில் காரை ஓட்டிய வழக்கில் சிக்கி அபராதம் கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரபல இந்தி இந்தி நடிகர் சசி கபூர் காலமானார்…

wpengine

கீர்த்தி சுரேஷ் சிரிப்புக்கு ஸ்ரீரெட்டி கண்டனம்…

wpengine

மணமக்களை வாழ்த்திய கிரிக்கெட், பாலிவுட் பிரபலங்கள்…

wpengine