உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

போதைமாத்திரை, பணத்துடன் வசமாக சிக்கிய இளைஞன்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

யாழ்ப்பாணம் – கோண்டாவில், வீரபத்திரர் கோவிலை அண்டிய பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகள், அவற்றை விற்பனை செய்து அதன்மூலம் பெற்றுக்கொண்ட பணத்துடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார்  23 வயதான இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை, அவரது உடமையில் இருந்து ஒரு தொகை போதை மாத்திரை, அவற்றை விற்பனை செய்ததன் மூலம் பெற்றுக்கொண்ட பணம் என்பவற்றை மீட்டனர்.

அதனை அடுத்து, கைது செய்யப்பட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

1,700 ரூபாய் வேதன அதிகரிப்பு சாத்தியமற்றது – பழனி திகாம்பரம்

Azeem Kilabdeen

மினுவாங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுக்கான அறிவித்தல்

wpengine

பாதிக்கப்பட்டவர்களுக்காக இ.போ.ச ஊழியர்கள் தமது ஒருநாள் ஊதியத்தை வழங்கத் தீர்மானம்

wpengine