உள்நாட்டு செய்திகள்

போதைப்பொருள் பாவனை பரவலடைவது தொடர்பான தேசிய ஆய்வு அறிக்கை இன்று(01) ஜனாதிபதியிடம் கையளிப்பு



(FASTNEWS | COLOMBO) – போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இன்று கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள பிரதான நிகழ்வில், போதைப்பொருள் பாவனை பரவலடைவது தொடர்பான தேசிய ஆய்வு அறிக்கை இன்று(01) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

போதைப் பொருள் ஒழிப்பு ஜனாதிபதி விசேட செயலணி, தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு சபை மற்றும் காவற்துறை என்பன இணைந்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளன.

இதேவேளை, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் வழக்கு விசாரணைகள் நிறைவுறுத்தப்பட்ட 1,695Kg சட்டவிரோத போதைப் பொருட்கள் பகிரங்கமாக அழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவின் கீழ் அமுல்படுத்தப்பட்ட தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு இணையாக குறித்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை பல்வேறு வகையான 24,818K 393g 767mg போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு )

Related posts

மெனிங் சந்தைக்கு பூட்டு

wpengine

ஒட்டுமொத்தமாக தீக்கரியாகிய கிளிநொச்சி பொதுச் சந்தை – அரசின் கவனயீனமா..?

wpengine

எல்ல – வெல்லவாய வீதியில் மண் மேடு சரியக்கூடிய அவதானம்..

wpengine