உள்நாட்டு செய்திகள்

போதைப்பொருட்களுடன் யுவதிகள் 03வர் உட்பட 12 பேர் கைது



(FASTNEWS | COLOMBO) – மாத்தறை, மிரிஸ்ஸ கடற்பகுதியில் படகு சவாரி செய்வதற்காக வருகை தந்த யுவதிகள் மூவர் உட்பட 12 பேர் போதைப் பொருட்களுடன் நேற்று(13) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்த ஐஸ், ஹசீஸ், கேரள கஞ்சா, போதை மாத்திரைகள் உட்பட பல்வேறு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காலி, மாத்தறை, வெலிகம, வத்தள, கனேமுல்ல, குருணாகல் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சிம்பாவே முன்னாள் ஜனாதிபதி ராபர்ட் முகாபே உலகினை விட்டும் பிரிந்தார்

wpengine

மூடப்பட்டுள்ள மன்னார் – புத்தளம் பாதை மீள் திறப்பு தொடர்பில், ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் அதிகாரிகள் குழுவினர் விஜயம்!

wpengine

கோட்டாபய ராஜபக்ஷ’வுக்கு எதிரான வழக்கு தொடர்பில் , இலஞ்ச ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபருக்கு நீதிமன்ற உத்தரவு…

wpengine