உள்நாட்டு செய்திகள்

போட்சிட்டி நிர்மாணத்துக்கான தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக சீனா அறிவிப்பு


போட் சிட்டி தொடர்பில் தீர்க்கப்படாதிருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. எனவே போட்டிசிட்டி நிர்மாணப்பணிகளை ஆரம்பிக்க முடியும் என்று சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் வெளியுறவு பேச்சாளர் லூ காங் இது தொடர்பில் செய்தியாளர்களுடன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இரண்டு தரப்புக்களும் பேச்சுவார்த்தைகளின் மூலம் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

சீனாவும் இலங்கையும் எப்போதும் இரண்டு தரப்புக்கும் சாதகமான திட்டங்களையே முன்னெடுத்து வந்துள்ளன.

இந்தநிலையில் இலங்கை பிரதமரின் சீன விஜயத்தின் போது இரண்டு தரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆழமான விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன என்றும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மன்னாரில் சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் – சிறுவர்களை கடத்த திட்டமா..?

wpengine

இன்று இரவு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

wpengine

அனைத்து பாடசாலைகளும் திங்களன்று ஆரம்பம்

wpengine