Top Story 2உள்நாட்டு செய்திகள்

போக்குவரத்து எச்சரிக்கை: கொழும்பில் IUSF பெரும் போராட்டம்..!

ஏழு (07) முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் (IUSF) அறிவித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக ஐ.ம.சு.கூவின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களை கொழும்பு – கோட்டை பகுதிக்கு வரவழைத்துள்ளதாகவும், அங்கு போராட்டம் நடத்துவது தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்களை இன்று பிற்பகல் 12.30 மணிக்கு கொழும்பு – கோட்டை பகுதியில் ஒன்றுகூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக வசந்த முதலிகே மேலும் தெரிவித்தார்.

Related posts

தேயிலை இறக்குமதி ,மீள் ஏற்றுமதி முற்றாக தடை

wpengine

எமில் ரஞ்சன் மற்றும் நியோமால் ரங்கஜீவ ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

ரத்கம வர்த்தகர்கள் கொலையின் சந்தேக நபர்கள் 07 பேரும் விளக்கமறியலில்…

wpengine