உள்நாட்டு செய்திகள்

பொல்கஹவெல, பனலிய ரயில் விபத்து குறித்து ஆராய குழு…


பொல்கஹவெல, பனலிய பிரதேசத்தில் நேற்று(06) மாலை இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்துக்கான காரணம் தொடர்பில் அடிப்படை விசாரணைகளை மேற்கொள்ள குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

கொழும்பு இலிருந்து கண்டி நோக்கி சென்ற ரயிலானது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பொல்கஹவெல, ரயில் நிலையத்தின் அருகே நிறுத்தி வைக்கையில் கொழும்பில் இருந்து ரம்புக்கன நோக்கிப் பயணித்த மற்றுமொரு ரயில் பின்னால் வந்து நிறுத்தியிருந்த ரயிலில் மோதியதில் 32 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

R.Rishma

Related posts

ஓய்வூதிய கொடுப்பனவு இன்றும் நாளையும்

wpengine

பசில் ராஜபக்ஷ எங்கு சென்றாலும், மக்கள் அவரை விரட்ட வேண்டும் – தயாசிறி..!

wpengine

கைப்பற்றப்படும் போதைப்பொருள், கோதுமை மாவாக மாறும் விநோதம்..!

wpengine