உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் விஷேட பணியகத்தின் அதிகாரி மரணம்



கம்பஹா, கொட்டதெனியாவில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 5வயது சிறுமியான சேயா சந்தவமியின் படுகொலையுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யுமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது கடமைக்காக சென்றிருந்த பொலிஸ் விஷேட பணியகத்தின் (புலனாய்வு பிரிவு) கான்ஸ்டபிள், மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து மரணமடைந்துள்ளார்.

நெஞ்சு வலி காரணமாகவே அவர், மரணமடைந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவருடைய சடலம் திவுலுப்பிட்டிய ஹோரகஹமுல்ல வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

(riz)

Related posts

முறைகேடான சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி…

wpengine

“ஒற்றுமையின் மூலம் சமூகத்திற்கெதிரான சதிகளை முறியடிப்போம்” மாவடிப்பள்ளியில் அமைச்சர் ரிஷாட்!

wpengine

வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள் அடுத்த ஆண்டு மீள ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் ரிஷாட்!

wpengine