உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பொலிஸ் விசேட அதிரடிப் படைக்கட்டளைத் தளபதியாக லத்தீப் நியமனத்திற்கு பொலிஸ்மா அதிபர் ஒப்புதல்.



பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீபை நியமிக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஒப்புதல் அளித்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படைக்கட்டளைத் தளபதியை நியமிப்பது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் மா அதிபர், இழுத்தடிப்பு செய்து வந்த நிலையிலேயே, இன்று வியாழக்கிழமை (18) அதற்கான ஒப்புதலை அவர் வழங்கியுள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீபை, பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளைத் தளபதியாக நியமிக்குமாறு பொலிஸ் ஆணைக்குழு அண்மையில் பரிந்துரை செய்திருந்தது.

கடந்த 09ஆம் திகதி முதல் இந்த நியமனம் வழங்கப்பட வேண்டியிருந்த போதிலும் பொலிஸ் மா அதிபரினால் அதற்கான அங்கீகாரம் வழங்கப்படாதிருந்து வந்தது. இந்நிலையில், இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் பொலிஸ் ஆணைக்குழு விளக்கம் கோரியிருந்தது.

1979ஆம் ஆண்டு, உப பொலிஸ் பரிசோதகராக பொலிஸ் சேவையில் இணைந்த எம்.ஆர்.லத்தீப், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் மிக நீண்ட அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உயர் நீதிமன்ற நீதிபதி கே.டீ.சித்ரசிரி பதில் தலைமை நீதிபதியாக நியமனம்…

wpengine

யாழ்ப்பாண மாநகர முதல்வரை சந்தித்தார் பிரான்ஸ் தூதுவர்

wpengine

ஓடும் வேனில் கழன்ற சக்கரம் – ஒருவர் உயிரிழப்பு

Azeem Kilabdeen