உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் திணைக்களத்தின் அனைத்து பொலிசாருக்கும் ஒரே மாதிரியான சீருடை..



பொலிஸ் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் தொடக்கம் பொலிஸ் மா அதிபர் வரை ஒரே மாதிரியான சீருடையை அறிமுகப்படுத்த அமைச்சர் சாகல ரத்நாயக்க தீர்மானித்துள்ளார்.

தற்போதைக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் என்றவாறாக மூன்று வகையான பொலிஸ் சீருடைகள் வழக்கத்தில் உள்ளன.

இதற்குப் பதிலாக ஒரே வர்ணம் மற்றும் ஒரே தரத்திலான சீருடையை அனைத்துப் பொலிசாருக்கும் வழங்குவதற்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தீர்மானித்துள்ளார்.

அத்துடன் சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர்களின் சப்பாத்துக்கள், தொப்பி என்பவற்றின் எடையை குறைத்து இலகு எடையில் சப்பாத்து மற்றும் தொப்பிகளை வழங்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு மேலும் உத்தரவிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

எதிர்வரும் நாட்களின் நிலைமை மேலும் மோசமடையும்! ரணில் பகிரங்க எச்சரிக்கை

wpengine

மஹிந்தவின் மே தினக்கொண்டாட்டத்திற்கு வருகை தந்த பஸ் பல்கலைக்கழக மாணவனின் உயிரை குறிவைத்தது

wpengine

இந்தியப் பிரதமர் மோடி எதிர்வரும் 09ம் திகதி இலங்கைக்கு விஜயம்

wpengine