உலக செய்திகள்

பொலிஸ் தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 4 பேர் பலி…



வங்காளதேசத்தில் பொலிசார் நடத்திய அதிரடி துப்பாக்கிச்சூட்டில் ஐ.எஸ் இயக்கதினருடன் தொடர்பில் இருந்த ஒரு பெண் உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

கடந்தாண்டு ஜூலை மாதம் வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள உணவு விடுதியில் வெளிநாட்டினரை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புடைய ஜமாத் உல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலில் மூளையாக செயல்பட்டது கண்டறியப்பட்டது.

டாக்கா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டில் பல இடங்களில் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்களை வேட்டையாட பல்வேறு இடங்களில் பொலிசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சிட்டகாங் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அந்த கட்டிடத்தை முற்றுகையிட்டு தீவிரவாதிகள் மீது பொலிசார் அதிரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். பொலிசார் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உள்ளிட்ட நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தில் இருந்து கையெறி குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

(rizmira)

Related posts

மன்னர் சார்லஸ் மீது மீண்டும் முட்டை வீச்சுத் தாக்குதல் – பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

wpengine

ஐக்கிய அரபு எமிரேட்ட்டில் மகிழ்ச்சி மற்றும் சகிப்புத்தன்மைக்கு தனித்தனி அமைச்சகம்

wpengine

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் உயிரிழப்பு…

wpengine