உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் செய்திகளை ஊடகங்களுக்கு வழங்க விசேட சபை



ஊடகப் பணிப்பாளர் சபையினாலேயே பொலிஸ் திணைக்களத்தின் செய்திகள் அனைத்தும் இதன்பிறகு ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

புதிய ஊடகப் பணிப்பாளர் சபைக்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த ஜயகொடி, அஜித் ரோஹன மற்றும் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஆகியோர் அங்கத்தவர்களாவர்.

பொலிஸ் செய்திகள் மிகச் சரியாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுவதற்காக குறித்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சபை உத்தியோகபூர்வமாக அமைக்கப்பட்டதன் பின்னர் யாருக்கும் மேற்குறிப்பிட்ட அதிகாரிகளுடன் பேசி தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பொலிஸ் மா அதிபர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

அவிஸ்ஸாவளை சுதந்திரக் கட்சி அமைப்பாளராக சோலங்கஆராச்சி நியமிப்பு

wpengine

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது

wpengine

நான் செய்த வரலாற்றுத் தவறு, மனம்வருந்தும் சந்திரிக்கா..!

wpengine