உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | புத்தளம்) – புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(19) காலை 8 மணிக்கு நீக்கிக்கொள்ளப்படவுள்ளது

இதேவேளை, குறித்த பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (18) மாலை 4.30 மணி முதல் புத்தளத்தின் 11 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் சிலாபத்தின் 7 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலும் நீர்கொழும்பின் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிலும் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இ.போ.ச பஸ்களது கட்டணங்களும் உயர்வு

wpengine

MCC எதிர்ப்பு மனுக்களை விசாரிக்க 5 நீதிபதிகள் குழு

wpengine

பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்

wpengine