உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் ஊடக முன்னாள் பேச்சாளர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை



பொலிஸ் ஊடக முன்னாள் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகரவின் செயற்பாடுகள் தொடர்பில், திணைக்கள மட்டத்தில் உடனடியாக ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு நேற்றுச் செவ்வாய்க்கிழமை பணிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சினாலேயே இவ்வாறு பணிக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணை அறிக்கை, மூன்று நாட்களுக்குள் அமைச்சர் சாகல ரத்னாயக்கவுக்குக் கிடைக்கவேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அறிக்கைக்கு பின்னர், அமைச்சரின் ஆலோசனைகள் கிடைக்கும் வரையிலும், ருவன் குணசேகர, ஊடகம் தொடர்பில் எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்கமுடியாது என்றும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Related posts

விமலுக்கு எதிரான விசாரணையினை விரைவுபடுத்தவும் [VIDEO]

wpengine

ஏழு பேர் பூரண குணம்

wpengine

தேர்தலை எதிர்கொள்வதற்கு பயப்படும் பொதுஜன பெரமுன – நிமல் லன்சா..!

wpengine