உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – அநுராதபுரம் – திருகோணமலை வீதியில் மொரவெவ பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஹொரவப்பொத்தான பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

கோட்டா பங்கேற்பு விழாவில் ரணிலுக்கும் அழைப்பு

wpengine

அமைச்சர் ரிஷாட்டின் வழிகாட்டலில், முசலியில் சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

wpengine

சைட்டம் தீர்ப்புக்கு எதிராக இலங்கை வைத்திய சபை மேன்முறையீடு…

wpengine