உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் ஆணைக்குழு செயலாளரின் மனு நிராகரிப்பு



(FASTNEWS|COLOMBO) – எவன் கார்ட் வழக்கு தொடர்பில் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த வழக்கின் சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சமன் திஸாநாயக்கவிற்கு எதிராக துப்பாக்கி கட்டளை சட்டத்தின் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதனால் தங்களுடைய நீதிமன்றத்திற்கு பிணை வழங்குவதற்கு அதிகாரம் இல்லை என தெரிவித்து கோட்டை நீதவான் ரங்க திஸநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

எவன் விவாகரத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கத்தினர் தன்னை கைதுசெய்வதற்கு எடுக்கும் முயற்சியினை தடுக்குமாறு கோரி கடந்த 8 ஆம் திகதி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் பிணை மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச நில அளவையாளர்களது வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது..

wpengine

சட்டவிரோத சிகரட்டுகளுடன் ஒருவர் கைது…

wpengine

ஊடகத்துறை அமைச்சு மற்றும் அதன் கீழ் காணப்படும் நிறுவனங்கள் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ்…

wpengine