உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் அனுமதி அறிக்கைக்கான கட்டணத்தில் மாற்றம்..


பொலிஸ் அனுமதி அறிக்கையைப் பெற்றுக் கொள்ளும் போது, அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்தத் திருத்தம், நவம்பர் மாதம் 5ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இலங்கையிலிருந்து, இலங்கை விண்ணப்பத்துக்குத் தபாலில் அனுப்பி வைப்பதற்கு 1,000 ரூபாய், இலங்கையிலிருந்து வெளிநாட்டு விலாசத்துக்கு அனுப்பி வைப்பதற்கு, 1,500 ரூபாய் மற்றும் இலங்கையிலிருந்து அல்லது வெளிநாட்டிலிருந்து, இணையத்தளத்தின் ஊடாக அனுப்பிவைப்பதற்கு 1,500 ரூபாய் என்ற முறையில் அறவிடப்படும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தென் அதிவேக வீதியின் இமதுவ – பின்னதுவ பகுதிகளுக்கு இடையே மண்சரிவு..!

wpengine

பெண்கள் உரிமைகள் அமைப்புகளுக்கு நிதியுதவி

wpengine

ஹட்ஷன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

wpengine