உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் அதிகாரிகள் இருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு நகர போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் 02 பொலிஸ் அதிகாரிகள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் தண்டனை வழங்கிய சம்பவம் தொடர்பிலேயே, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மருதானை – டார்லி வீதியில் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரமின்றி வீதியில் பயணித்த நால்வருக்கு குறித்த இரண்டு பொலிஸாரும் தண்டனை வழங்கியுள்ளனர்.

தோப்புக்கரணம் போடுமாறு பொலிஸார் இருவரும் குறித்த நால்வருக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

Related posts

5வது மற்றும் இறுதி டெஸ்ட் – ஆண்டர்சன் திடீர் விலகல்..

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றமை குறித்து சமல் கருத்து…

wpengine

நிரந்தர நியமனம் கோரி ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine