ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பொலிஸ்மா அதிபரின் பெயரால் பேஸ்புக்கில் மோசடி



பொலிஸ்மா அதிபரின் பெயரில் போலி பேஸ்புக் கணக்கை உருவாக்கி அதன்மூலம் பெண்களை ஏமாற்றி வந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நாளைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தற்சமயம் இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தொடர்பில் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு முறையிட்டுள்ளார்.

இந்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நியுசிலாந்தில் இருந்து இலங்கை வந்த சந்தேகநபரை நேற்று முன்தினம் கட்டுநாயக்க விமானநிலயத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related posts

வாக்குகளை கொள்ளையிட முயற்சிப்போரை சுட்டுக் கொலை செய்ய உத்தரவு…!

wpengine

பா.உறுப்பினர்களான காமினி ,விஜித மற்றும் பொலிசாருக்கு ஆளுங்கட்சியினரால் தாக்குதல்.. (Photos)

wpengine

பேரணி 02ம் பாகம் – “மக்கள் சக்தி கண்டிக்கு” விரைவில்…

wpengine