உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கி சூட்டில் பிக்கு ஒருவர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | ஹம்பாந்தோட்டை ) – ஹுங்கம பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பொலிஸ் ஆணையை மீறி தப்பிச் செல்ல முயற்சித்துள்ள சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் இருந்த துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் அருகில் பயணித்த வேன் ஒன்றில் இருந்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த பிக்கு அக்குனுகொலபெலெஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related posts

அவசரகாலச் சட்டத்துக்கு எதிரான 3 மனுக்களை முன்கொண்டுசெல்ல அனுமதி!

News Editor

சுவிஸ் தூதரக அதிகாரி CID யில் முன்னிலை

wpengine

யாழ்.மாணவர்கள் கொலை – ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் இன்று நீதிமன்றில்..

wpengine