உள்நாட்டு செய்திகள்

பொலிதீன் தடையில் எவ்வித மாற்றமும் இல்லை..



பொலிதீன் இறக்குமதி, உற்பத்தி மற்றும் பாவனைக்கான தடையானது எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது.

இதேவேளை இதற்கெதிராக கைது செய்யும் சட்ட நடவடிக்கைகள் உடனடியாக இடம்பெறாது என்று இன்றைய(23) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

இத்துறையை சார்ந்தவர்களின் நலன் கருதி மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை ஆராய்வற்காக உரிய நிறுவனங்களின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2017.07.11ம் திகதி அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இதனை நடைமுறைக்கு வரும் வகையில் செயற்படுத்துவதற்கும், அத்தடையினை செயற்படுத்துவதனால் பாதிப்படைகின்ற பொலிதீன் உற்பத்தி தொடர்பான அனைத்து தரப்பினரையும் முறையான முறையில் மாற்று முறையொன்றுக்கு உள்வாங்குவது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

 

Related posts

எரிபொருள் மானியம் கோரும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

wpengine

குமார மற்றும் சமல், ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகல்

wpengine

ராஜிதவுக்கு எதிரான மனு விசாரணை செவ்வாயன்று

wpengine