உள்நாட்டு செய்திகள்

பொலிசார் திடீர் சுற்றிவளைப்பினால் பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றல்…



பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைய நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனைகள் மூலம் பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

நேற்றிரவு(31) 11 மணி முதல் இன்று(01) அதிகாலை 3 மணி வரையில் 1300 இற்கு மேற்பட்ட வீதிச் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்தக் காலப்பகுதியில் 21000 வாகனங்களையும் 42000 மேற்பட்ட நபர்களையும் சோதனையிட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதன்போது சுமார் 14g ஹெரோயினும் 11kg ற்கு மேற்பட்ட கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதுடன் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 3860l மதுபானமும் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் 3700 இற்கு மேற்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 554 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனவரியில் நல்லிணக்க வாரம்…

wpengine

நாட்டின் சமகால நிலவரம் குறித்து அஸ்கிரிய மகா சங்கம் அரசுக்கு சிவப்புச் சமிஞ்ஞை..

wpengine

கொழும்பில் பாரிய போக்குவரத்து மத்திய நிலையம்…

wpengine