உள்நாட்டு செய்திகள்

பொருளாதார மையமாக மாற்றப்படும் ஹம்பாந்தோட்டை


ஹம்பாந்தோட்டையை ஒரு பொருளாதார மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த நடவடிக்கைக்கு சீன அரசாங்கம் முதலீடுகளை வழங்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சீன அரசாங்கம் பொலன்னறுவை பகுதியிலும் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சீனாவின் 21ஆம் நூற்றாண்டு கடல்சார் பட்டுப்பாதை இந்திய மற்றும் இலங்கைக்கான பொருளாதாரத்தை வலுப்படுத்தும் எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts

2016ம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு.

wpengine

வெள்ளத்தினால் சேதமடைந்த பயிர்ச்செய்கைகளுக்கு இழப்பீடு வழங்க கணக்கீடு ஆரம்பம்..!

wpengine

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் சனல் 4 குற்றச்சாட்டை விசாரிக்க விசேட குழு – தமிழர்களோ, முஸ்லிம்களோ இல்லை..!

wpengine