உள்நாட்டு செய்திகள்

பொருட்ளின் விலையோ வானளவில் உயர்வு – அமைச்சர்களுக்கோ புத்தாண்டு பரிசு



மக்கள் அபிலாஷைகளை விஞ்சிய அமைச்சரவையே நாட்டினுள் செயற்பட்டு வருவதாக ஜே.வீ.பி குற்றம் சுமத்தியுள்ளது.

ஜே.வீ.பியின் கட்சி காரியாலயத்தில் இன்று(07) பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் பிரதான செயலாளர், டில்வின் செல்வா  இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இன்று பொருட்ளின் விலையோ வானளவில் உயர்ந்துள்ளது, ஆனால் புதுவருடப் பரிசுகளாக புதிய அமைச்சர் பதவிகள்  வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நேற்றைய தினம் சத்திய பிரமாணம் செய்த புதிய அமைச்சர்கள் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்த்தன முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க, மேலும் சில அமைச்சர்களுக்காக தேசிய அரசாங்கத்தில் இடமிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Related posts

சமிஞ்சை கோளாறினால் ரயில் சேவையில் தாமதம்

wpengine

ஊவா மாகாண முதலமைச்சருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு…

wpengine

ஆணைக்குழு விசாரணை முன்னிலையில் ஆஜராக முடியாது – மஹிந்த

wpengine