உள்நாட்டு செய்திகள்

பொன்சேகாவின் புதிய பதவிக்கு எதிராக கூட்டு தொழிற்சங்கங்கள் நடவடிக்கை..



அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு முழுமை இராணுவ தளபதி பதவி வழங்கப்படவுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் பல்வேறு தொழிற்சங்கங்கள் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

அரசாங்க மருத்துவர் சம்மேளனம், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்களே மேற்கண்டவாறு இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் சரத் பொன்சேகாவின் பதவிக்கு எதிராக கூட்டு தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகவுள்ளதாக குறித்த அந்த தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

சைட்டம் என்ற மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான போராட்டம் உட்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவே சரத் பொன்சேகாவுக்கான பதவி வழங்கப்படவுள்ளதாக அந்த தொழிற்சங்கங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்நிலையில் கொழும்பில் நேற்று(27) செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அரசாங்க மருத்துவ சம்மேளன மேலதிக செயலாளர் ஹரித்த அலுத்கே, தனியார் கல்வி தொடர்பான அரசாங்கத்தின் இரட்டைக்கொள்கையை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

(rizmira)

Related posts

அம்பாறையில் பாரிய தீ பரவல்..!

wpengine

ஜனாதிபதியினை சிக்கலில் மாட்டியுள்ளனர் – நிஸ்ஸங்க

wpengine

தேயிலை ஏற்றுமதிக்கு புதிய வழிமுறைகள்

wpengine