உள்நாட்டு செய்திகள்

பொது செயலாளர் பதவியிலிருந்து ஆறுமுகன் தொண்டமான் விலகினார்…


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுகூடல் கொழும்பில் உள்ள இ.தொ.கா தலைமையகத்தில் இன்று(30) இடம்பெற்றது.

காங்கிரஸின் பொது செயலாளரும், தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கூடிய தேசிய சபை மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களால் குறித்த இந்நிர்வாக மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

அந்தவகையில் இதுவரை காலமும் காங்கிரஸின் பொது செயலாளர் மற்றும் தலைவராக பதவி வகித்த ஆறுமுகன் தொண்டமான், இன்றில் இருந்து தலைவராக மட்டும் செயற்படவுள்ளார்.

அத்தோடு, பொது செயலாளராக அனுஷியா சிவராஜாவும், பிரதி பொது செயலாளராக ஜீவன் தொண்டமான் மற்றும் உப தலைவராக பதுளை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

விஷ்ணு தேவாலயத்தில் பரவிய தீயினால் ஒருவர் காயம்…

wpengine

குகுலே கங்கையின் வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளது..

wpengine

போக்குவரத்து அபராதத் தொகையானது 15ம் திகதி முதல் அதிகரிப்பு…

wpengine