Top Story 3உள்நாட்டு செய்திகள்

பொது அமைதியை பேணுவதற்கு ஆயுதப்படைகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளையும் அழைத்து ஜனாதிபதி உத்தரவு

பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளையும் அழைத்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பமான நிலையில், காலை 9.30 மணியளவில் இந்த விடயம் குறித்த ஜனாதிபதியின் மகஜரை சபாநாயகர் சமர்பித்தார்.

குறித்த மகஜரில் 40வது அதிகாரசபையின் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி பொது ஒழுங்கைப் பேண வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு, அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேநேரம் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொது ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் இராணுவ ஜெனரல் தயா ரட்நாயக்கவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு..

wpengine

அரச பல் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

wpengine

தொண்ணூறு ஆயிரத்தினை கடந்தது

wpengine