உள்நாட்டு செய்திகள்

பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டிற்குள் கொரொனா தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்துக்களை முன்வைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இது தொடர்பில் தெரிவிக்கையில்;

ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதன் ஊடாக அரசியல் இலாபம் ஈட்ட முற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் மாத்திரம் சிந்தித்து செயற்பட வெண்டிய தருணம் இதுவெனவும் சுஜீவ சேனசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சம்பிக்கவின் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

wpengine

அரசாங்கம் இன்று வௌியிட்ட புதிய பட்டியல்

Azeem Kilabdeen

பிள்ளையானுக்கு மீள் 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு

wpengine