உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொதுஜன முன்னணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ஆதரவாளர்கள் சிலர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் பெல்மடுல்ல நகரில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தாக்குதலில் காயமடைந்த இரண்டு நபர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி மற்றும் எஹலியகொடை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பெல்மடுல்ல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

பல்கலைக்கழகங்களுக்கு புதிய சட்டங்கள் உருவாக்கப்படும் – பிரதமர்

wpengine

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று

wpengine

கழிவுக் குழிக்குள் விழுந்து 04 பேர் உயிரிழப்பு…

wpengine