உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் நிதியமைச்சரே ஜனாதிபதி ரணில் : பட்ஜெட்டில் எங்கள் கொள்கைகள் இருக்க வேண்டும் என்கிறார் நாமல்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த வருட வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பல விடயங்கள் கடந்த வரவு – செலவுத் திட்டத்திலும் முன்மொழியப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் இன்று திங்கட்கிழமை (13) தனது வரவு – செலவுத்திட்ட உரையைச் சமர்ப்பித்திருந்தார்.

இதனையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்க்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முதல் பார்வையில் கடந்த பட்ஜெட்டிலும் பல விடயங்களை முன்வைத்துள்ளார். அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தெரிகிறது. எனவே மீண்டும் அவை முன்வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் நிதியமைச்சராக அவர் வந்துள்ளார். அப்படியானால், பட்ஜெட் முன்மொழிவுகளில் எங்கள் கொள்கைகள் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் சரிபார்க்கும் பாடசாலை விவரங்கள்…

wpengine

உணவு ஒவ்வாமை – 28 மாணவர்கள் வைத்தியசாலையில்

wpengine

இணையத்தின் ஊடாக பண மோசடி : 14 பேர் கைது

wpengine