விளையாட்டு

பையில் இருந்த மர்ம பொருள் குறித்து நடுவரின் அவதானம் – மைதானத்தில் பரபரப்பில் மலிங்க… [VIDEO]



அவுஸ்திரேலியாவுடனான முதலாவது T-20 போட்டியின் போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தனது பையில் வைத்திருந்த மர்ம பொருள் குறித்து தற்போது வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

இவ்வாறு மலிங்க அடிக்கடி காற்ச்சட்டை பையினுள் கை வைத்திருந்ததன் காரணமாக மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நடவடிக்கையை உற்று நோக்கிய போட்டியின் மூன்றாவது நடுவர் இதனை ஆராயுமாறு நடுவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் மலிங்கா பந்து வீச சென்ற போது இடையில் நடுவர் இடைநிறுத்தவே, மலிங்க பையில் இருந்த “கை சூடாக்கியை” எடுத்து சிரித்தவாறே காட்டினார்.

மேலும் குறித்த கை சூடாக்கியை குளிர் நேரத்தில் பயன்படுத்த முடியும் என போட்டி வர்ணனையாளர்கள் முன்னரே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த காணொளி…

Related posts

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்

wpengine

இலங்கை – பங்களாதேஷ் : இறுதிப் போட்டி இன்று

wpengine

5வது மற்றும் இறுதி டெஸ்ட் – ஆண்டர்சன் திடீர் விலகல்..

wpengine