உலக செய்திகள்

பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் கைது



பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் டியாகோ சோடனை (Diego Dzodan) பிரேஸில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேஸ்புக் நிறுவனத்தின் இலத்தீன் அமெரிக்க பிரிவின் துணைத் தலைவரான இவர், போதை பொருள் விற்பனை தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் வட்ஸ் எப் மெசெஞ்சர் ஊடாக பரிமாற்றப்பட்ட தகவல்களை பொலிஸாருக்கு வழங்க மறுத்த குற்றசாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கொள்கையின் அடிப்படையில் தனக்கு அந்த தகவல்களை வழங்க முடியாது என டியாகோ சோடன் கைது செய்யப்பட்ட பின்னர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

அதேவேளை இக்கைது தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

Related posts

பப்புவா நியூ கினியா தீவில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine

ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்ட் டிரம்ப்

wpengine

பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சருக்கும் கொரோனா உறுதி

wpengine