உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை….



அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்தால் நூற்றுக்கு 15% பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என அனைத்து இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் முதல் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

பேரூந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் நாடு முழுவதும் பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் எரிபொருள் விலை குறைக்கப்பட்டால் பேரூந்து கட்டணத்தையும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டம் மீண்டும் திறப்பு

wpengine

“முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விஷேட சலுகையை தடையின்றி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுங்கள்” பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

wpengine

தாஜுதீன் கொலை – விசாரணைக் கோவைகளை மூடுமாறு அனுர இட்ட உத்தரவு அம்பலமானது

wpengine