உள்நாட்டு செய்திகள்

பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்…



அரச மற்றும் தனியார் பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வருடாந்த பேரூந்து கட்டண அதிகரிப்பு தொடர்பான பிரேரணை இன்று(20) அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட போதே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி 6.28% இல் பேரூந்துக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

9 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச பேரூந்து கட்டணம் ஜூலை மாதம் 1ம் திகதி தொடக்கம் 10 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பேரூந்து கட்டண அதிகரிப்பானது, தேசிய கொள்கையின் பிரகாரம் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் சீரமைக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

இடைக்கால வரவு – செலவு திட்டம் இன்று பாராளுமன்றில்!

wpengine

ஒருநாள் சேவை மீண்டும் இன்று முதல்

wpengine

ஊழல் குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை கிடைத்தது

wpengine