உள்நாட்டு செய்திகள்

பேரூந்துக் கட்டணங்கள் எதிர்வரும் ஜுலை மாதம் முதல் அதிகரிக்கும் – கெமுனு விஜேரத்ன…



தனியார் பேரூந்துக் கட்டணங்கள் எதிர்வரும் ஜுலை மாதம் முதல் அதிகரிக்கப்படும் என தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய உள்நாட்டு வரிச் சட்டம் ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக வாகனங்கள் மற்றும் வாகனங்களின் உதிரிப்பாகங்கள் என அனைத்தினதும் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைவாக பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சங்கம் எடுக்கும் தீர்மானத்துக்கு அமைவாக கட்டண உயர்வு அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

####

Related posts

தேரரின் தகாத உறவு, விகாரை மணியை ஒலிக்கச்செய்து ஊர்மக்களை விகாரைக்கு வரவழைப்பு..!

wpengine

ஜனாதிபதி பாராளுமன்றம் விஜயம்…

wpengine

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்…

wpengine