உலக செய்திகள்

பேருந்துடன் லொறி மோதிய விபத்தில் 4 பேர் பலி…


அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரில் பயணிகள் சென்ற பேருந்து மீது லொறி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், 12 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

லொறி கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது வேகமாக மோதிய விபத்தில் பேருந்தின் முன்பகுதி நொறுங்கியது. பேருந்தில் உடல் நசுங்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தகவலறிந்து மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஐக்கிய நாடுகள் சபைக்கு புதிய பொதுச் செயலாளர் தெரிவு.

wpengine

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

wpengine

சுய தனிமைப்படுத்தலில் பின்லாந்து பிரதமர்

wpengine