உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தை இழந்து ஸ்டீவன் சுமித்



ஆஷஸ் தொடரில், கார்டிப்பில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இந்த ஆட்டத்திற்கு பிறகு டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய துணை கெப்டன் ஸ்டீவன் சுமித் (901 புள்ளி) 2-வது இடத்திற்கு இறங்கியுள்ளார். ஆஷஸ் முதலாவது டெஸ்டில் இரு இன்னிங்சில் தலா 33 ரன் மட்டுமே எடுத்ததால் அவர் 12 புள்ளிகளை இழந்து பின்னடைவை சந்தித்து இருக்கிறார்.

2-வது இடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் 908 புள்ளிகளுடன் மீண்டும் ‘நம்பர் ஒன்’ அந்தஸ்தை எட்டியுள்ளார். தென்ஆப்பிரிக்க வீரர் அம்லா 3-வது இடத்தையும், ஆஷஸ் டெஸ்டில் 134, 60 ரன்கள் வீதம் அடித்து அசத்திய இங்கிலாந்தின் ஜோ ரூட் 3 இடங்கள் அதிகரித்து தனது சிறந்த தரநிலையாக 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய தரப்பில் டாப்-10 பட்டியலில் விராட் கோலி (9-வதுஇடம்) என்பதும் குறிபிடத்தக்கது.

(riz)

Related posts

புறக்கோட்டை பகுதியில் வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது…

wpengine

சிறுநீரக வியாபாரம் – இன்டர்போல் உதவியை நாடும் இந்தியா

wpengine

உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு, கிறிஸ்மஸ் வீதி பிரகடனம்..

wpengine